சனி, 14 ஆகஸ்ட், 2010

விடுகதைகள்

  • சிவப்பு பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது? அது என்ன?
  • ஆயிரம் தச்சர் கூடி, அழகான மண்டபம் கட்டி, ஒருவன் கண்பட்டு, உடைந்ததாம் மண்டபம். அது என்ன?
  • பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?
  • அகத்தில் அகம் சிறந்த அகம். அது என்ன அகம் ?
  • வானத்துக்கும் பூமிக்கும் ஒரே கம்பி .அது என்ன ?
  • குட்டைப் பெண்ணுக்குப் பட்டுப் புலவை. அது என்ன ?

விடை தெரிந்தால் பதில் போடுங்கள்..!!!

உங்களுக்கு தெரியுமா??

சானியா மாலிக் (கவிதை! )

சானியா மாலிக் (கவிதை! )

என்ன தவறு செய்தது இந்த பெண் ?
அண்டை நாட்டு ஆடவனை மணந்தால்
இவர்களுக்கு ஏன் எரிச்சல் வருகிறது?
இருவரின் மனமும் ,மதமும் ஒன்றானபின்
இவர்கள் எதற்கு குறுக்கே?
ஊடகங்கள் சிலநாட்களாய் இவர்களை
சுற்றியே வந்ததும் ,
சுற்றி வந்து இவர்களை மென்றதும்
கொடுமையிலும் கொடுமை !
ஆடுகளத்தில் வெற்றிகளை கொணர்ந்து
நாட்டுக்கு அர்பணித்த அம்மங்கை
நாடுகடத்த பட வேண்டுமாம்! -எல்லை தாண்டிய
தீவிரவாத தீயினால் கருகிய -இரு நாட்டின்
அமைதியும், நட்பும்,
மாலிக் சானியாவை மணந்த பின்னே
மண்ணில் மறுபடியும் துளிர் விடாதா?
இன்னல் பல கடந்து -இல் வாழ்வில்
இணைந்திட்ட
வெற்றி மகள் சானியாவை
வாஞ்சையுடன் வாழ்த்திடுவோம்!

கண்ணதாசன் !

கண்ணதாசன் !

இந்தப்பெயரை ஒலிக்கும்

உதடுகளே

கவிதைகள் ஆகிவிடும்.

கொஞ்ச நாட்களே ஆண்டாலும்
உனது கவி ஆளுமையால்
திரையுலகம் நிமிர்ந்து நின்றது !

உனது வரிகளை உச்சரித்து
பாடகர்கள் உயர்ந்து நின்றார்கள்!

மெட்டமைத்த இசைவாணர்
தொட்டு நின்றார் சிகரங்களை !

சிற்றின்பவாசல்களை தேடி ,பிறகு
ஆன்மிக உலகில் அமர்ந்து விட்ட கவியரசன் நீ!
க‌விதையின்

காட்டாறுக‌ளையெல்லாம்

த‌ட‌ம்புர‌ட்டிக்கொண்டு வ‌ந்து

அழ‌கு காதல் உண‌ர்ச்சி எனும்

தேனாறுக‌ளையெல்லாம்

குடித்து தீர்த்துவிட்டு

காலிக்கிண்ண‌த்தை

அதாவ‌து இந்த‌ உல‌க‌த்தை

வீசியெறிந்து விட்டுப்

போய்விட்டாய் !

அந்த‌க் கிண்ண‌த்தை மொய்த்த‌

எறும்புக்கூட்ட‌ங்க‌ளே

இன்று வ‌ரை

க‌விஞ‌ர்க‌ள் என்று

ஊர்ந்து கொண்டிருக்கின்ற‌ன‌.

பூமியைக் கொஞ்சம் மாற்று!!


தெய்வ குழந்தையே..!!

உனது மனதில் ஏது வஞ்சம்!
உன்னிடத்தில் மட்டும் இல்லை லஞ்சம்!!
பொய்யும் புரட்டும்மனிதரிடைமட்டும்தான்
உனக்கு இன்னும் கற்பிக்கப்படவில்லை!
அதனால்தான்உன் புன்னகைதெய்வீகமாய் இருக்கிறது!!
உனது பாஷைதேவ பாஷையாய் இருக்கிறது .
உனக்கு பசித்தால் அழ மட்டுந்தான் தெரியும்!
ஆனால் பிறரை அழ வைக்கஎங்களுக்கு மட்டுமே தெரியும்!!
உனது மொழிஇலக்கணம் இல்லா சங்கீதம்!
இனிமை நிறைந்த புது வேதம்!
நீ ஏழையாய் இருந்தாலும்உன் சிரிப்புஏழுலகையும் விலை பேசும்!
தெய்வ குழந்தையே நீ
தீவிரவாதியின் வீட்டில் பிறந்து
தீர்த்திடு அவரின் வன்மத்தை!
அரசியல் வாதிக்கு பிறந்து
அன்பு மழலை பேசி
உன் பிஞ்சு பாதத்தை கொஞ்சிடகொடுத்து விடு!
அப்போதாவது அவர்கள்சுயநலம் விடுத்து
பொது நலம் புகுந்திடட்டும்!!
கலப்படக்காரனுக்கு வாரிசாய் வந்து
அவன் நெஞ்சில் கருணை பிறந்திட ஆணையிடு!!
உன்னால்தான் முடியும்ஏனென்றால்
நீ தெய்வத்திற்கு இணையன்றோ?
உனது பாஷையும் தேவ பஷையன்றோ?
தெய்வமே படட்டும் எங்கள்மீதுஉனது மூச்சுக்காற்று!
அமைதிப் பூங்காவாய் இந்த பூமியைக் கொஞ்சம் மாற்று!!

-$தர்ஷினி$

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

THE ALCHEMIST ... Paulo Coelho . my impressions சில இரவுகளுக்கு முன் நான் எழுதிய கவிதை ......

உறங்காமலும் விழிக்காமலும்
இருக்கின்ற பொழுதுகளில்தான்
மெய் தரிசனம்
சில மின்னல் கீற்றுகளாய்
வந்து போகிறது

அந்த இரவின் அனுபவங்கள் - நான் மெய் தரிசனம் என்று கூறியவை - தந்த உணர்வு நன்றாக நினைவிருக்கிறது. சிற்சில ஒளிக் கீற்றுகளாய் உண்மைகளும் புரிதல்களும் வந்து அறிமுகமாகி விட்டுப் போகும். சில பேருண்மைகள் கூட ..........

அந்த உணர்வு எனக்குப் பரிச்சயமானதாகவே இருக்கிறது. ஆனால் எப்போதும் உடனிருப்பதில்லை ! பல சமயங்களில் எழுதும் போது உணர்வேன் . ஒரு சிலவற்றை மீண்டும் வாசித்துப் பார்க்கையில் தெரியும் - இது நான் எழுதியதல்ல , 'நான்' எழுதியதென்று ! இந்த மேற்கோள்களுக்குள் வீற்றிருக்கும் நான் ..... ஒரு தனிப்பட்ட அடையாள நிலை. கிட்டத்தட்ட அந்த மெய் தரிசனத்திலிருக்கும் புரிதலின் நிலை .

என்னால் பல தருணங்களில் எனக்கும் 'எனக்கும்' உள்ள வித்தியாசத்தை உணர முடிந்துள்ளது . 'நானாக' இருக்கையில் என் ஆன்மாவின் குரலைக் கேட்டிருக்கிறேன். அதுதான் ஆன்மாவா என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயமாய் அது எனக்குள் இருக்கும் ஜீவனின் குரல் . இதை உணர்ந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயர் வைத்து அழைக்கிறார்கள் . நான் 'நான்' என்கிறேன் .

அந்தக் குரலை இதயத்தின் குரல் என்று கூறும் ஒரு புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன். பாவ்லோ சீலோ என்ற பிரேசிலியரின் THE ALCHEMIST என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு நூல். ஒரு வாலிபன் தான் கண்ட கனவைத் தேடிச் செல்வதும், செல்லும் வழியில் கற்றுக் கொள்பவையும் , உணர்ந்து கொள்பவையும் அடங்கிய நாவல் . Soul of the world , Universal language , The voice of the heart என்ற மூன்று விஷயங்கள் . ஒன்று போலவே தோன்றினாலும் ஒன்றல்ல ..... ஆனால் மூன்றும் ஒரு ஆதாரத்திலிருந்து கிளைத்தவை .


Soul of the world - உலகின் ஆன்மா என்று வைத்துக் கொள்வோம் ! அத்தனை உயிரிலும் ஊடாடிக் கலந்துள்ள ஆன்மா . உணர்ந்து முயற்சிக்கும் உயிர்களால் அடையாளம் காணப் படுகிறது . உயிர்கள் என்று வரைமுறை தாண்டி இயற்கை , காற்று . வெயில் , மணல் , தங்கம் , தகரம் , வார்த்தை , எண்ணம் என்று அத்தனைக்கும் உள்ள தனியான ஆன்மாக்களும் சங்கமிக்கும் பெருவெளி , இந்த உலகின் ஆன்மா !

இந்த அத்தனை ஆன்மாக்களுக்கும் விளங்கக்கூடிய பொதுவான உலகமொழி - Universal language ! வார்த்தைகள் தேவையில்லை ! வடிவங்கள் தேவையில்லை ! ஆன்மாக்களின் மொழி .... மனிதன் ஒரு அமைப்பை வடிவமைத்து அதற்கு மொழி எனப் பெயரிட்டதற்கு முன்பிருந்தே அறிந்த ஆதார மொழி ! பசியும் , காதலும் , அழுகையும் , கோபமும் அடிக்கடி நம்மை இந்த மொழிக்குப் பழக்கப்படுத்தும் விஷயங்கள். மொழி ஞானம் வளர வளர மழையும் நிலவும் இரவும் வானமும் பேசசுத்துணையாய் வருகின்றன !


அதில் நான் மேற்கோளிட்டுக் காட்டும் 'என்' குரல் - The voice of the heart - பழகிய மனங்களுக்குக் கேட்கிறது. நம்மை நமக்குக் காட்டும் , நம் கனவுகளைக் காட்டி அதை நோக்கி வழி நடத்தும் குரல் இந்தக் குரல் . எனக்குள் ஒன்றல்ல ...... இரண்டு குரல்கள் இருப்பதாக உணர்கிறேன் . மேலோட்டமான ஒரு குரல் வாயாடியாக அடிக்கடி பேசிக் கொண்டு , கேள்வி கேட்டுக்கொண்டு , பதில் சொல்லிக்கொண்டு என் இன்னொரு குரலாக இருக்கிறது . அதற்கும் கீழே உள்ளத்தின் ஆழத்தில் உலகின் ஆன்மா ஊடுருவும் இடத்தில் 'என்' குரல் இருக்கிறது . அது அடிக்கடி பேசுவதில்லை ...... அல்லது என் காதுபடப் பேசுவதில்லை ........ அல்லது நான் காது கொடுப்பதில்லை . சமங்களுக்கு ஏற்ப இவற்றில் ஏதோ ஒரு காரணம் .


ஆனால் நானும் 'என்' குரலும் பரிமாறிக்கொள்ளும் உரையாடல்களை நான் அறிவேன் . அவை மெய் தரிசன சந்தர்ப்பங்கள் !

Life is never the same again after you read certain books ! எனக்குப் புதுமைப்பித்தன் அப்படி வாய்த்தது . சீலோவும் அங்கு வந்து விட்டார் . இந்த விஷயங்களையெல்லாம் நான் இப்போதுதான் கற்றுக்கொள்கிறேன் என்றில்லை ...... ஏற்கெனவே , பல தருணங்களில் உணர்ந்த விஷயங்களை ' உனக்கு இவை தெரியுமே' என்று அடையாளம் காட்டி என்னை மீண்டும் மெய் தரிசனத்திற்கு இட்டுச் சென்ற புத்தகம் இது ... அதுவும் தெளிவான விழிப்பு நிலையிலேயே !

உனக்கு ஒன்று உண்மையாக வேண்டுமானால் , இந்த மொத்த அண்டவெளியும் உனக்காக இரகசியமாய் ஒன்று கூடி உதவி செய்யும் என்று சீலோ சொல்கிறார் .
by G.S